தமிழச்சியைவிட கனிமொழிதான் அழகு! தலையில் பூக்களைக் கொட்டி வெளுத்து வாங்கும் கீதா ஜீவன்!

தமிழச்சி தங்கப்பாண்டியனைவிட எங்க தொகுதி வேட்பாளர் கனிமொழிதான் அழகான வேட்பாளர் என்று சொன்னதுடன் நில்லாமல், கனிமொழி தலையில் குடம் நிறைய மல்லிகைப் பூ கொட்டி டன் கணக்கில் ஐஸ் வைத்திருக்கிறார் கீதா ஜீவன்.


இதெல்லாம் எதுக்கு என்று கனிமொழி சொன்னாலும், மீண்டும் மீண்டும் சில குடங்கள் பூ கொட்டப்பட்ட நேரத்தில் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். கனிமொழி. ஏனாம் கீதா ஜீவனுக்கு இந்த சந்தோஷம் என்று கேட்டால் காரணம் இருக்கவே செய்கிறது. 

அனிதா ராதாகிருஷ்ணன் தோட்டத்தில் பணம் எடுக்கப்போன வருமான வரித்துறையினர் ஒன்றுமில்லாமல் திரும்பிவிட்டாலும், அனிதாவை விடுவதாக இல்லை. அவரது உறவினர், நண்பர்கள் வீடுகளை நோட்டமிட்டு வருவதால் அவர் கதிகலங்கி நிற்கிறார். இந்த நேரத்தைப் பயன்படுத்தி கனிமொழியுடன் ஒட்டுகிறார் கீதா.

ம்... கனிமொழிக்கு மட்டும்தான் மல்லிகைப்பூவா என்று நம் அழகான வேட்பாளர் கேட்காத வரைக்கும் சரிதான். கேட்டு அவர் போர்க்கொடி உயர்த்தினார் சிரமம் தான்.