4 தொகுதியிலும் படுதோல்வி! எல்லாத்துக்கும் அக்கா தான் காரணம்! கதறிய சுதீஷ்!

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்த நிலையில் அதற்கு காரணம் தனது அக்கா தான் என்று கூறி எல் கே சதீஷ் கதறியுள்ளார்.


நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக தீவிரம் காட்டியது. ஆனால் பிரேமலதா அதிமுக கூட்டணி தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் விருதுநகர் ஆகிய 4 தொகுதிகளில் வேட்பாளர்களை இறக்கியது தேமுதிக.

திமுக பொருளாளர் பிரேமலதாவின் சகோதரர் சதீஷ் கள்ளக்குறிச்சியில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி சவால் விடும் வகையில் பணத்தையும் வாரி இறைத்தார். ஆனால் 7 லட்சத்து 21 ஆயிரத்து 213 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார்.

தேமுதிக வேட்பாளர் குதித்து 3 லட்சத்து 21 ஆயிரத்து 795 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதே போன்று வடசென்னை, திருச்சி மற்றும் விருதுநகரிலும் தேமுதிக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.

திமுகவுடன் கூட்டணி அமைக்கவே சுதீஷ் துவக்கத்திலிருந்தே ஆர்வமாக இருந்தார். திமுகவும் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு தொகுதிகளை கொடுக்க முன்வந்தது. ஆனால் பிரேமலதா திமுக கூட்டணிக்கு நோ சொல்லிவிட்டு அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார். இப்போது தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி கூட ஒன்பதில் வென்றுள்ளது. எனவே திமுக கூட்டணியில் தெரிந்து இருந்தால் தான் எம்பி ஆகி இருக்க முடியும் என்றும் இப்படி மோசமான தோல்வியை தேமுதிக தலித் இருக்காது என்றும் சுதீஷ் கதறி வருகிறார். எவ்வளவோ எடுத்துக் கூறியும் தனது அக்கா தான் திமுக கூட்டணியை கெடுத்து விட்டதாகவும் புலம்பி வருகிறார் சுதீஷ்.