திரைப்பட இயக்குனர் விஜய் அவர்களின் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. நடிகை அமலாபாலை முதலாவதாக திருமணம் செய்த விஜய் அவரை விவாகரத்து செய்து தற்போது சென்னையை சேர்ந்த மருத்துவரை மணக்கிறார்.
அமலா பாலின் முதல் கணவருக்கு 2வது கல்யாணம்! பெண் யார் தெரியுமா?

நடிகர் அஜித் நடித்த 'கிரீடம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் ஆர்யா நடிப்பில் வெளியான 'மதராசப்பட்டினம்' 'தெய்வத்திருமகள்' ' தேவி' போன்ற படங்களை தமிழில் டைரக்ட் செய்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'தலைவா' படத்தையும் இயக்குனர் விஜய் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் சேர்ந்து பணியாற்றிய அமலாபாலுக்கும் இயக்குனர் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.இதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மூன்று வருடங்கள் நன்றாக சென்ற நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இருவரும் கோர்ட்டு மூலம் விவாகரத்து பதிவு செய்து விவாகரத்து பெற்றனர். விவாகரத்து பெற்றதையடுத்து நடிகை அமலாபால் திரைப் படங்களில் நடிப்பதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் விஜய் தனது இரண்டாம் திருமணம் பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா சென்னையில் டாக்டர் பட்டம் பெற்று பொது நல மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர்களது திருமணம் வரும் ஜூலை 11ம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.