விஜய் ஹீரோ! விக்ரம் வில்லன்! மிரட்டப் போகும் ஷங்கர்!

சங்கர் இயக்கும் புதிய படம் ஒன்றில் விஜய்யும் விக்ரமும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரம்மாண்ட இயக்குனர் என போற்றப்படும் சங்கர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் இரண்டாம் பாகத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். ஆனால் நடிகர் கமல்ஹாசன் அரசியல் வேலைகளில் தீவிரமாக இருப்பதால் இந்த படத்திற்கு நேரம் ஒதுக்குவதில் சற்று சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த படத்திற்கு முன்னதாக வேறு ஒரு படம் ஒன்றை இயக்க சங்கர் திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றது. அந்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் என்றும் ஒருவர் விஜய் மற்றொருவர் விக்ரம் என்றும் சினிமா வட்டார தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய படத்திற்காக ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். அதேவேளையில் நடிகர் விக்ரம் கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் உதவியாளரான ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.

சங்கர் விஜய் விக்ரம் கூட்டணியின் திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டணி அமையும் பட்சத்தில் தமிழ் திரை உலகம் கண்டிராத பிளாக் பஸ்டர் படமாக இது இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே ஆருடம் சொல்லத் தொடங்கிவிட்டனர்.