சைக்கிளை ஓவர் டேக் செய்ய முயற்சி..! திடீரென பாய்ந்து சென்டர் மீடியனை உடைத்து மற்றொரு கார் மீது மோதிய கோரம்..! துடிதுடித்து உயிரிழந்த 5 பேர்!

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் அருகே லாரியை ஓவர் டேக் செய்த கார் நிலைதடுமாறி சைக்கிளில் மோதி சென்டர்மீடியத்தை உடைத்து எதிர்புறம் வந்து கொண்டிருந்த இன்னொரு காரில் போய் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் மொத்தம் 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தும்மிச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ஒரு மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இவர் மனைவி வசந்தா, தாயார் ஜெயகனி, உறவினர் செல்வமைந்தன், அவரது மனைவி ஜெயந்தால்மணி என 4 பேரையும் அழைத்து கொண்டு ஒரு கல்யாணத்துக்கு காரில் சென்றுள்ளார்.  

இந்நிலையில், கொடைரோடு அருகே சடையாண்டி பிரிவு நான்கு வழிச்சாலையில் 2 கார்களும் எதிரெதிரே அசுர வேகத்தில் வந்ததுள்ள. மறுபக்கத்தில் இயக்கிய பிரகதீஷ் என்பவர் முன்னால் லாரியை ஓவர் செய்ய முயன்றார். அப்போது கிருஷ்ணன் என்ற 70 வயது முதியவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓவர் ஸ்பீடில் வந்த பிரகதீஷ் சைக்கிள் மீது மோதினார்.

பிறகு கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனை உடைத்து கொண்டு. இன்னொரு பக்கத்தில் பாய்ந்து, எதிரே வந்த வெள்ளையனின் கார் மீது பயங்கரமாக மோதியது. கார் மோதிய வேகத்தில்

காரின் இடிபாடுகளில் சிக்கி வெள்ளையன், ஜெயகனி, செல்வமைந்தன் ஆகிய 3 பேருமே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றோரு காரில் வந்த பாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய பிரகதீஷ், வசந்தா, ஜெயந்தால்மணி, சைக்கிளில் வந்த கிருஷ்ணன் ஆகியோர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர்.

பின்னர் தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இடுப்பட்டவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் என்பவர் இறந்துவிட்டார். மீதமுள்ளவர்கள் உயிருக்கு போராடி வருகிறார்கள். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த விபத்தினை மாவட்ட எஸ்பி சக்திவேல் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் காவல்துறையினர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் கொடைரோடு டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமிராவிலும் பதிவாகி உள்ளது. பிரகதீஷ் மேல்தான் முழு தவறும் உள்ளதாக இந்த காட்சிகள் உறுதிபடுத்துகிறது. மேலும், இந்த சம்பவம் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிக்கிம் மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.