போலீஸ் ஸ்டேசனில் காதலுக்கு மரியாதை செய்த பெண் இன்ஸ்பெக்டர்! பிறகு நேர்ந்த விபரீதம்!

திண்டுக்கல் காவல் நிலையத்தில் காதலர்களை சேர்த்து வைக்க பாடுபட்ட பெண் காவல் ஆய்வாளர் பதவிக்கு வந்த ஆபத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


மதுரையை சேர்ந்தவர் மனோகர் (வயது30) காவலராக பணிப்புரிந்து வருகிறார்.மனோகர் மற்றும் சத்யா(26) இருவரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.சில நாட்களுக்கு முன்னதாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் வசந்தி கடந்த 17 ஆம் தேதி இருவரையும் அழைத்து சமாதானம் செய்துவைக்க முயற்சி செய்துள்ளார்.

இதற்கிடையில் சத்தியா சார்பாக வழக்கறிஞர் தியாகு உடன் வந்திருந்தார், இவருக்கும் ஆய்வாளர் வசந்தி க்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் வசந்தி வழக்கறிஞர் தியாகுவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் தியாகு தன்னை தாக்கியதாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தகவல் அறிந்த வழக்கறிஞர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் படுகாயம் அடைந்த தியாகுவை மருத்துவ மனையில் அனுமதிக்காமல் அலைகழித்ததில் போராட்டம் முற்றி நள்ளிரவு 2.30 மணிவரை சென்றது, இதனை அடுத்து மாவட்ட சரக டி.ஐ.ஜி ஜோஷி நிர்மல் குமார் ஆய்வாளர் வசந்தியை இடைக்கால நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

காதலர்களை சேர்த்து வைக்க கவுன்சிலிங் செய்ய போக, காவல் துறை பணியை இழந்து பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளார் ஆய்வாளர்-வசந்தி.