கொரோனா வைரஸ்க்கும் சாதாரண காய்ச்சல், ஜலதோஷத்துக்கும் வித்தியாசம் இவ்வளவுதான்.

அக்கம்பக்கத்தில் ஒருவர் சாதாரணமாக இருமினால் அல்லது காய்ச்சல் என்று சொன்னாலே தெறித்து ஓடும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது.


இத்தனை டென்ஷனும் பயமும் தேவையில்லை என்பதுதான் உண்மை. ஆம், கோவிட் 19 எனப்படும் கொரோனோ வைரஸ் நோய் தாக்கத்தை எப்படி அறிந்துகொள்ளலாம் என்பதற்கு இணையத்தில் உலாவரும் அற்புதமான பதிவு இது.

முதல் மூன்று நாட்கள்

1. சாதாரண சளி தொற்று போல் காணப்படும்

2. லேசான தொண்டை வலி இருக்கும்

3. காய்ச்சல், களைப்பு எதுவும் இருக்காது

4. பசி, சாப்பாட்டில் எந்த மாற்றமும் தென்படாது.

நான்காம் நாள்

1. தொண்டை மற்றும் உடம்பு வலி ஏற்படும்.

2. தொண்டையில் கரகரப்பு உண்டாகும்

3. உடல் வெப்பம் 36.5⁰சி என்றளவில் இருக்கும்

4. உணவு உட்கொள்வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.

5. லேசான தலைவலி உண்டாகும்

6. சிறியளவில் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்

ஐந்தாம் நாள்

1. தொண்டை வலி மற்றும் கரகரப்பு

2. லேசான காய்ச்சல். 

3. உடல் சோர்வு மற்றும் மூட்டு வலி

ஆறாம் நாள்

1. காய்ச்சல் அதிகரிப்பு

2. சளியுடன் கூடிய இருமல் அல்லது வறட்டு இருமல்

3. சாப்பிடும்போது, பேசும்போது அல்லது விழுங்கும்போது தொண்டை வலி

4. சோர்வு, மயக்கம் மற்றும் குமட்டல்

5. அவ்வப்போது சுவாசக்கோளாறு, மூச்சுவிடுதலில் சிரமம்.

6. விரல்களில் வலி.

7. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு.

ஏழாம் நாள்

1. காய்ச்சல் அதிகரிப்பு

2. அதிக நெஞ்சு சளியுடன் கூடிய இருமல்.

3. உடம்பு மற்றும் தலைவலி

4. வயிற்றுப்போக்கு மோசமடைதல்

5. வாந்தி.

எட்டாம் நாள்

1. மேலான காய்ச்சல்

2. மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் முச்சு விடுகையில் நெஞ்சு பாரமாக உணர்தல்.

3. தொடர்ச்சியான இருமல்

4. தலைவலி, மூட்டுவலி மற்றும் இடுப்பு சம்பந்தப்பட்ட வலி ஏற்படுதல்

ஒன்பதாம் நாள்

1. ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகள் மோசமடையும்.

2. காய்ச்சல் அதிகரிக்கும்

3. இருமல் தொடருவதோடு, மேலும் மோசமடையும்.

4. முச்சு விடுவதில் ஏகப்பட்ட சிரமங்களை மேற்கொள்ள நேரிடும்.

இந்த நேரத்தில் ரத்தப்பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் நுரையீரல் சம்பந்தப்பட்ட சோதனைகளை மேற்கொண்டு, அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பதட்டமும் பயமும் வேண்டாமே.