சின்னத்தம்பியை கூட்டிட்டு வரலையா? அமைச்சர் ஜெயகுமார் மகன் ஜெயவர்தனிடம் குசும்பு செய்யும் உ.பிக்கள்!

மீம்ஸ் என்றாலே அமைச்சர் ஜெயக்குமார் என்ற நிலைமை தான் இருந்தது. அவருக்கு தம்பிப்பாபா பிறந்திருக்கார் என்ற செய்தி வந்ததுமே கமெண்ட்ஸ் றெக்கை கட்டிப் பறந்தன.


ஜெயவர்தன் பிரசாரம் தொடங்கியபோது, ‘நான் ஜெயகுமார் மகன் ஓட்டு கேட்டு வந்திருக்கேன்” என்று கேட்பது போலவும், உடனே ஒரு பெருசு, ‘இப்பத்தான் பொறந்ததா சொன்னாங்க…. அதுக்குள்ளே ஓட்டு கேட்டு வந்திட்டியே.. அப்பனை மாதிரியே ஃபாஸ்ட்” என்று மீம்ஸ் போட்டார்கள்.

அதேபோன்று, ‘பெரிய பையனுக்கு நாடாளுமன்றத்துக்கு சீட் வாங்கியாச்சு, இனிமே சின்னப் பையனுக்கு ஸ்கூல்ல இப்பவே சீட் வாங்கணும்” என்று ஜெயக்குமார் சொல்வது போன்று மீம்ஸ் பறந்தன.

இந்த வகையில் நேற்று ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் பல்வேறு இடங்களில் ஓட்டு கேட்டு வந்தார் அப்போது குசும்பு பிடித்த உடன்பிறப்பு ஒருவர், ‘என்ன தம்பி, உன் சின்னத்தம்பியை பிரசார்த்துக்குக் கூட்டி வரலையா?’ என்று சீரியஸாகக் கேட்டிருக்கிறார். முதலில் தெரியாமல் விழித்த ஜெயவர்தன், அப்புறம் கேள்வியின் உள்ளர்த்தம் புரிந்து முகம் சிவந்து சட்டென்று விலகி விட்டாராம்.

அப்பாவுக்கு என்ன டோஸ் விழுந்திச்சோ…