4வது வீரராக களம் இறங்க அவர் சரிப்படமாட்டார்! கோலியை எச்சரிக்கும் சச்சின்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், உலகக்கோப்பை தொடரில் தோனி 5வது வீரராக களமிறங்க வேண்டும் என்று கருது தெரிவித்துள்ளார்.


இன்னும் சில நாட்களில் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் 4வது வீரராக யார் களமிறங்குவார் என்ற குழப்பம் இன்னமும் நிலவி வருகிறது.

இந்த குழப்பம் பற்றி கருது தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒரு அனுபவ வீரர். அவர் ஆட்டத்தை கடைசி வரை கொண்டு சென்று வெல்ல கூடிய திறன் படைத்தவர். ஆகவே தோனி 5வது  வீரராக களமிறங்குவதே சிறப்பாக இருக்கும் என சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் ஹார்டிக் பாண்டியா 6வது வீரராக களமிறங்குவதால், தோனியும், பாண்டியாவும் ஆட்டத்தின் கடைசி ஓவர்களில் அடித்து ஆட சரியாக இருக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார். 4வது வீரர்களுக்கான தேர்வில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ்  ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.