சேஸிங் மன்னன் கோஹ்லியை முந்திய தோணி!

உலக அளவில் சேஸிங் செய்து இலக்கை அடைவதில் மன்னன் என புகழப்படும் விராட் கோஹ்லியை நம்ம தல தோணி சேஸிங்கில் முந்தி ஒரு சாதனையை படைத்துள்ளார்.


இந்திய அணியினர் கடந்த பல வருடங்களில் சேஸிங் செய்வதில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டாவது இன்னிங்சில் விராட் கோஹ்லி ஆக்ரோஷமாக விளையாடி எதிரணியினரை மிரட்டுவார். முதல் இன்னிங்க்ஸை காட்டிலும் இரண்டாவது இன்னிங்சில் தான் இவர் பல சாதனைகளை புரிந்துள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோணி சேஸிங்கில் அதிக சராசரி வைத்துள்ள பேட்ஸ்மேன்களில் விராட் கோஹ்லியையும் முந்தி முதல் இடத்தில் உள்ளார்.

சேஸிங்கில் தோணியின் பேட்டிங் சராசரி 99.85 ஆகும். சர்வதேச அளவில் அதிக சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய கேப்டன் விராட் கோஹ்லி இரண்டாம் இடத்தில உள்ளார். இவரின் சராசரி 99.04 ஆகும்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தோணி பல ஆட்டங்களுக்கு பிறகு சிறப்பாக சேஸிங் செய்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். இந்த வருடம் நடந்த இரண்டு போட்டிகளிலும் தோணி அரை சதம் அடித்து நல்ல பார்மில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது