மலைக்க வைக்கும் மாறன் சொத்து மதிப்பு! கேட்டால் தலை சுற்றிவிடும்!

தயாநிதி மாறன் தனக்கு ரூ.11.67 கோடி அசையும் சொத்து - ரூ 59,000 அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்!


மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறன் தனக்கு 11 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு அசையும் சொத்தும் 59 ஆயிரம் ரூபாய்க்கு அசையா சொத்தும் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

ஷெனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதில், 3 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு தன் பெயரிலும், 3 கோடியே 9 லட்சம் ரூபாய்க்கு மனைவி பெயரிலும், 4 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கு மகன் பெயரிலும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருக்குவளையில் உள்ள 59 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள விவசாய நிலமல்லாத நிலமே தனது அசையா சொத்து என அவர் கூறியுள்ளார். 2017-18-ஆம் ஆண்டில் 2 கோடியே 83 லட்சத்து 68 ஆயிரத்து 820 ரூபாய்க்கு தன் பெயரிலும் 60 லட்சத்து 62 ஆயிரத்து 240 ரூபாய் தனது மனைவி பெயரிலும் வருமான வரி கணக்கு காட்டியிருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி இணைப்பக முறைகேடு வழக்கு சி.பி.ஐ. வசம் நிலுவையில் இருப்பதாகவும், தான் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்