உடல் எடை குறைக்கும் டீடாக்ஸ் டயட்.. 5 நாளில் அற்புத மாற்றம்!

தினமும் நாம் சாப்பிடும் உணவு, தண்ணீர், காற்று மூலம் நச்சு பொருட்கள் நம் உடலில் கொழுப்பு செல்களாக தேங்குகிறது.


என்னென்ன நச்சுபொருட்கள் ? உணவுப்பொருட்களில் உள்ள ஹார்மோன்கள்,உணவுப்பொருள் பேக்கிங்ல இருக்கும் கெமிக்கல், காற்றுல இருக்கும் தூசு, உணவு நிறமிகள், சிகரெட் புகை. நம் உடலால் இயற்கையாகவே கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல்மூலமா இந்த நச்சுகளை வெளியேற்ற முடியும்.

டீடாக்ஸ் டயட் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவு உணவு உண்ணாமல் விரதம் இருந்துவிட்டு, அதனைத் தொடர்ந்து திட உணவுகளைத் தவிர்த்து நீர் ஆகாரங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுதல் அதாவது, காய்கறி சூப், பழச்சாறு, கிரீன் டீ போன்றவை. உப்பு கலந்த நீர், எலுமிச்சை சாறு போன்றவை எடுத்துக்கொள்ளலாம்.

பால் பொருட்கள், கோதுமை உணவுகள், அரிசி உணவுகள், சர்க்கரை சத்து உள்ள பொருட்கள் இவையெல்லாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. விரதம் மூலம் செரிமான மண்டலத்துக்கு ஒரு பிரேக் கொடுக்கும் போது, அது தன்னையும் சரிபடுத்தி, தேவையான சத்துக்களை மட்டும் உட்கிரகிக்கத் தொடங்கும். இதன் மூலம் உடல்எடையைக் குறைக்க முடியும். உடல் எடையைக் குறைக்க 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த வகை டயட் குறுகிய காலம் மட்டுமே செயல்படுத்தமுடியும். புரோட்டீன் சத்து குறைவால், உடல் சோர்வு, உடல்பயிற்சி செய்ய முடியாமை போன்றவை ஏற்படலாம் அதனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இதனைத் தொடர முடியாது. சுருக்கமாகச் சொன்னால் கோவில்களுக்காக ஒரு வாரம் வரை நம் மக்கள் இருக்கும் விரதமுறையே டீடாக்ஸ்- டயட். இந்த முறை ஆயுர்வேதத்திலும் பஞ்சகர்மா என்ற பெயரில் உள்ளது.

- ராமலெட்சுமி