ஒரே இரவில் கமலுக்கு ஏறிய டிமாண்ட்! விரைவில் திமுக கூட்டணி!

கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 3.78 சதவிகிதம் வாக்குகளை அள்ளியிருக்கிறார் கமல்ஹாசன். எங்கேயும் வெற்றி பெற முடியவில்லை என்று பார்த்தால், இது குறைவாகத் தெரியும், ஆனால், இதுவே மாபெரும் வெற்றி என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.


ஏனென்றால், இன்னமும் கிராமப்புறங்களில் கமல்ஹாசனுக்கு உரிய கட்டமைப்பு ஏற்படவில்லை. அது விரைவில் அமைந்துவிடும். இந்த வாக்கு சதவிகிதம் ஓரளவுக்கு உயர்ந்தாலே, சட்டமன்றத் தொகுதிகளில் மிகப்பெரும் மாற்றத்தை உருவாக்கிவிடும். அதனால், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் முதல் கூட்டணி சாய்ஸாக கமல் இருப்பார் என்கிறார்கள்.

ஏனென்றால் பணம் கொடுக்காமல் இந்த இலக்கை கமல் தொட்டதே சாதனைதான். நேர்மைக்கு பரிசாகத்தான் இந்த வாக்குகள் கிடைத்திருக்கிறது. அதனால்தான் இன்று பேசிய கமல்ஹாசன், ‘‘நாங்கள் தான் "ஏ" டீம் - எதிர்ப்பார்த்ததைவிட அதிகமான வாக்குகளை மக்கள் எங்களுக்கு அளித்துள்ளனர், வாக்களித்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், தொடர்ந்து செயலாற்றுவோம், நல்ல வழியில்தான் நாங்கள் போய்க்கொண்டிருக்கிறோம் - 

தலைவர்கள் மரணத்தால் அரசியலில் ஒருபோதும் வெற்றிடம் உருவாகாது, வெற்றிடம் உருவாக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். தமிழகத்தின் எழுச்சி தான் எங்கள் இலக்கு’’ என்று கூறியிருக்கிறார். வரவேற்க வேண்டிய அரசியல்.