ரயில் நிலையத்தில் வரம்பு மீறிய காதல் ஜோடி! ஆபாச தளத்தில் வெளியான வைரல் வீடியோ!

டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்தில் பதிவான வீடியோ ஆபாச இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சில நாள் முன்பாக, டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றில், இளம் வயது ஜோடி, மிக நெருக்கமாக, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது.

இதுபற்றி டெல்லி மெட்ரோ அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ திடீரென தற்போது ஆபாச இணையதளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன்  அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பொது இடம் என்றும் பாராமல் இப்படி கீழ்த்தரமாக நடந்துகொண்ட அந்த ஜோடிகள் பற்றி கண்டனம் தெரிவிக்கும் அதிகாரிகள் அதேசமயம், இந்த சிசிடிவி காட்சியை ஸ்மார்ட்ஃபோன் வழியே படம்பிடித்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றிய நபர் யார் என்று துறை ரீதியான விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.

பொது இடங்களில் யாரும் இத்தகைய அந்தரங்க லீலைகளை செய்யாமல் கட்டுப்பாடாக இருக்கும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.