காய்கறி வாங்க 30 ரூபாய் கேட்ட மனைவிக்கு நடுரோட்டில் தலாக்! அதிர வைத்த முஸ்லீம் கணவன்!

டெல்லி: காய்கறி வாங்க பணம் கேட்ட மனைவிக்கு, கணவன் தலாக் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியின் புறநகரில் உள்ள கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி என்ற பகுதியில் சபீர் (35 வயது) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸைனப் (30 வயது) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில்,சில நாள் முன்பாக, காய்கறி வாங்குவதற்காக, கணவரிடம் 30 ரூபாய் காசு தரும்படி மனைவி ஸைனப் கேட்டுள்ளார்.

ஆனால், அவர் காசு தரவில்லையாம். தொடர்ந்து பலமுறை காசு கேட்கவே, ஆத்திரமடைந்த சபீர், உடனடியாக, 3 முறை தலாக் சொல்லி, திருமண விலக்கு செய்வதாக, அறிவித்திருக்கிறார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஸைனப் இதுபற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். தங்களுக்குள் அடிக்கடி சண்டை வந்ததாகவும், திடீரென காய்கறி வாங்க காசு கேட்ட கொடுமைக்கு தலாக் அளித்துவிட்டார் எனவும்,  ஸைனப் குமுறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், சம்பவத்தன்று எனது கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை அடித்து , உதைத்தனர். சிறிது நேரம் கழித்து, என்முகத்தில் காறி துப்பிய என் கணவர் தலாக் சொல்லி என்னை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். காய்கறி காசு கேட்டதற்காக, இவ்வளவு பெரிய கொடுமை நடக்கும் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. 

இதற்கிடையே, ஸைனப் அளித்த புகாரின்பேரில், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது தட்ரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், முதலில் சபீரை கைது செய்தனர். ஆனால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தலைமறைவாகிவிட்டனர்.