நடுவானில் ரூட்டை மறந்த பைலட்! வழி தெரியாமல் எடுத்த திடீர் முடிவு! பீதியில் உறைந்த 146 பயணிகள்!

டெல்லி: நடுவானில் வழி தெரியாமல் குழம்பிய விமானி பற்றிய செய்திதான் இது...


ஆம், டெல்லியில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 17) தாய்லாந்து நோக்கில், 146 பயணிகளுடன் கோ ஏர் நிறுவனத்தின் A320neo ரக விமானம் புறப்பட்டது. நல்ல முறையில் டேக் ஆஃப் ஆகி, விமானம் நடுவானில் பறந்தபோதுதான், பயண திசை தொடர்பான விளக்கப்படம் எதுவும் கொடுக்கப்பட வில்லை என, விமானிகளுக்கு தெரியவந்தது. 

இதையடுத்து, நடுவானில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நீண்ட நேரம் தடுமாறிய விமானிகள் வேறு வழியின்றி, உடனடியாக, மீண்டும் டெல்லியை நோக்கி விமானத்தை திருப்பி, தரையிறக்கினர். பிறகு,  பயணத் திசை தொடர்பான விளக்கப் படம் பெற்றுக் கொண்டு, விமானத்தை தாய்லாந்து நோக்கி மீண்டும் இயக்கிச் சென்றனர். 

முன்னதாக திட்டமிடப்பட்டிருந்த விமானம் பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்றப்பட்டு, புதிய விமானத்தை இயக்கியதால் இந்த குழப்பம் ஏற்பட்டதாக, கோ ஏர் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.