காதலிக்கும் போது காதலனுடன் மிக நெருக்கம்! வீடியோ எடுத்ததால் ஏற்பட்ட விபரீதம்! இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

டெல்லியில் தன்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.


தந்தையை இழந்து தாயுடன் டெல்லியில் வசித்து வந்த மாணவி ஒருவருக்கும் அப்பகுதி இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி திடீரென காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர் தன்னுடன் காதலை தொடராவிட்டால் நெருக்கமாக இருந்த ஆபாச காட்சிகளை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன மாணவி வீட்டிற்கு வந்துள்ளார்.

தன்னுடைய தோழிக்கு போன் செய்து வீட்டிற்கு வருமாறும், வரும்போது சாப்பிட ஏதாவது வாங்கி வருமாறும் கூறியுள்ளார். அந்த சமயத்தில் மாணவியின் தாயும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் தோழி வந்து வீட்டின் கதவை தட்டியபோது கதவு திறக்கவில்லை.

பின்னர் அந்த தோழி தாய்க்கு தகவல் அளிக்க அவரும் வந்து கதவை தட்டினார். ஆனால் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவு உடைக்கப்பட்டது. அப்போது உள்ளே சென்று பார்த்தபோது அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பார்த்து தாய் கதறி அழுதார்.

இதையடுத்து மகளை காதலித்து மிரட்டிய இளைஞர் மீது தாய் போலீசில் புகார் அளித்தார். காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில், நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிடுவேன் என இளைஞர் மிரட்டியதால்தான் மகள் தற்கொலை செய்து கொண்டதாக மனுவில் வேதனையுடன் தெரிவித்துள்ளார் தாய்.