வந்துவிட்டது தீபாவளி! சிவகாசியில் பரபரக்கும் பட்டாசு உற்பத்தி! ஆனால் விலை தான்..! அதிர்ச்சி தகவல்!

இந்தாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம். மேலும், கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை சற்று குறையுமான என மக்கள் எதிர்பார்க்கிறனர்.


தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு தயாரிப்பு பணிகள் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மக்கள் கடந்த ஆண்டை விட இந்தாண்டு பட்டாசு விலை சற்று குறையுமான என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 

இந்த மாதன்ம் இறுதியில் ஆதாவது, அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. மதம் வேறுபாடின்றி அனைத்து மக்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.

ஏன்? சிவகாசியை தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகின்றது. என்றால் இந்திய நாட்டின் பட்டாசு தேவையை சிவகாசி உள்ள பட்டாசு ஆலைகள் தான் 90 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன. மேலும், சிவகாசியில் உள்ள 900 பட்டாசு ஆலைகளில் அமைந்துள்ளது. அதில் சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழிலையே சார்ந்துள்ளனர். சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பிரபலமாக விளங்குகின்றன.

இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, சிறுவர்களை கவரும் வகையில் புது விதமான குருவி வெடி, லட்சுமி வெடி, சரம் மற்றும் இரவு நேரத்தில் வெடிக்கப்படும் மத்தாப்பு, சங்கு சக்கரம் போன்ற வழக்கமாக பட்டாசுகள் சந்தைக்கு அதிகளவில் தயாரிக்கப்பட்டுகின்றன. இது மட்டுமின்றி பல பேன்சி ரகங்களும் தயாரிக்கப்படுகின்றன.

தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை வைப்போர் தற்போதே சிவகாசிக்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு குறைந்த விலையில் பட்டாசுகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, பட்டாசு விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 10 சதவீதம் உயரும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். அதற்கு காரணம் மூலப்பொருட்களின் விலை ஏற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றால் இந்தாண்டு பட்டாசு விலை உயரும் என எதிர்பார்க்கின்றனர்.

இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு, மத்திய மற்றும் மாநில அரசு அரசாங்கம் குறைந்த அளவில் புகையை வெளியேற்றும் பட்டாசுகளை தேர்வு செய்து வெடிப்பது சுற்றுசூழலுக்கு நல்லது என்றும், பசுமை பட்டாசுகள், பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் நேரம் போன்றவையை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளது.