மகள் லெஸ்பியன் என கண்டுபிடித்த தந்தை! புத்தி சொல்லியும் கேட்காமல் அடம்! வீட்டுக்கு அழைத்து வந்து தந்தை செய்த விபரீத செயல்!

டெல்லியில் மகள் தன் பெண் தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் மனமுடைந்த தந்தை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


டெல்லி சாக்தாரா இப்பகுதியில் தந்தை தன் மகள் பெண் தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்ததால் அதை ஏற்கமனமில்லாமல் தந்தை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதான தம்பதியருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் மூத்த மகளின் திருமணத்திற்காக வரன் தேடும் பணியில் பெற்றோர்கள் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென மூத்தமகள் தனது பெண் தோழியுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  

இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் அவரது மகள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இந்நிலையில் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தையின் செல்போனுக்கு மகளிடம் இருந்து அழைப்பு வந்தது அதில் நான் எனது பெண் தோழியுடன் தனிமையில் வீடு எடுத்து வசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரது தந்தை இருவரையும் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அழைப்பை ஏற்று இருவரும் வீட்டிற்கு வந்து ஒன்றாக தங்கியுள்ளனர். இந்நிலையில் அவரது தோழி அவரின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லை என பார்க்க ஊருக்கு சென்று விட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் தந்தை-மகள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது தந்தை அறையின் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சிறிது நேரம் கழித்து அறையின் உள்ளே இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளது. அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மகள் மற்றும் அருகில் இருந்தவர்கள் உடனே கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பின்னர் இதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.