தலையில் அரிசி மூட்டை! கால் கடுக்க நடை! மக்களுக்காக தாசில்தார் செய்த செயல்! குவியும் பாராட்டு!

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை தலையில் சுமந்தபடி மக்களுக்கு கொண்டு சேர்த்த தாசில்தாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவில் உள்ள பல்வேறு அணைகள் நிரம்பி வழிகின்றன. இதையடுத்து அங்கு உள்ள பகுதிகள் பாதி வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் தங்களது வீடு மற்றும் உடைமைகளை இழந்த மக்களுக்கு போதிய அளவு நிவாரண பணிகளை பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்தங்காடி தாலுகாவைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் தத்தளித்து வருகிறது.

இந்நிலையில் பொது மக்களுக்கு உணவு மற்றும் உடுத்த உடை இல்லாமல் உதவிக்காக கரமேந்தி நிற்கின்றனர். இந்நிலையில் பெல்தங்காடி தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் தாசில்தார் கணபதி சாஸ்திரி தன்னால் முடிந்த நிவாரணப் பொருள்களை திரட்டி அதை பொது மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மிகவும் ஆபத்தான பாலத்தில் தன் தலைமேல் நிவாரண பொருட்களை வைத்தும், கையில் உடைகளையும் வைத்து பாலத்தை கடந்து பொது மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளார்.

அவரது பணியை பொதுமக்கள் பலரும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமாக முன்வந்து உதவிய தாசில்தார் கணபதி சாஸ்திரி என்பவரை பொதுமக்கள் தங்களது ஆழ்ந்த நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.