ஆபத்தான டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவுதாம்! உஷார் மக்களே! ஜன்னலை மூடி வையுங்க!

மழை காலம் தொடங்குவதற்கு முன்னரே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கிறார்கள். இப்போதே நிலவேம்பு குடிநீர் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது தெரியுமா? பொதுவாக பகல் நேரத்தில் கடிக்கும் ‘ஏடிஸ்‘ வகை கொசுவால்தான் டெங்கு காய்ச்சல் பரவுகிறது. ஆனால் சட்டென்று டெங்கு காய்ச்சலைக் கண்டுபிடிக்க முடியாது. ஏனென்றால், இருமல், சளி, நாள்பட்ட காய்ச்சல் போன்றவைதான் ஆரம்பத்தில் இருக்கும். அதனால், மலேரியா காய்ச்சல் என்றுதான் பலரும் அசட்டையாக இருக்கிறார்கள்.

அதன்பிறகு ரத்த பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளுக்குப் பிறகுதான் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க முடியும். இதற்கு 4 நாட்கள் வரை ஆகும். இந்த காய்ச்சல் பரவுவதற்கு வைரஸ் தான் முதன்மை காரணமாக உள்ளது. இருமல் மூலம் பரவும் வைரஸ் காரணமாக பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த காய்ச்சல் பரவுகிறது. முறையான சிகிச்சைதான் டெங்கு வகை காய்ச்சலை கட்டுப்படுத்த சரியான வழியாகும்.  

எலும்புகளை முறித்துப்போட்டதைப்போல கடுமையான வலி எல்லா மூட்டுகளிலும் ஏற்பட்ட பிறகுதான் பெரும்பாலோர் டெங்கு நோய் என்று அறிகிறார்கள். பொதுவாக இந்த நோய் ஏழு நாள்களில் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் டெங்கு வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதற்கு தேவையானது. ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கை குறையும்போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும்.

உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படலாம். அதனால், டெங்கு வகை காய்ச்சலில் இருந்து குழந்தைகளை காக்க பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர், பழச்சாறு வழங்கலாம். இளநீர் கொடுக்கலாம். இதுதவிர திரவ ஆகாரங்களை கொடுக்க வேண்டும். ஒருவேளை டெங்கு வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருந்தால் அதன்பிறகு டாக்டர்களின் அறிவுரைப்படி மருந்து, மாத்திரைகள் எடுத்து கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலுக்கு, தடுப்பு மருந்துகள் இல்லை என்றாலும், அதை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ளன. எனவே, காய்ச்சல் ஏற்பட்டவுடன், அருகில் உள்ள, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுங்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, குணமாக்க முடியாது என கைவிரிக்கப்பட்டு, கடைசி நேரத்தில், அரசு மருத்துவமனைகளுக்கு செல்வது சரியல்ல.