டெல்லியில் தமிழக மாணவர்களுக்கு ஆபத்து! அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் விளையாட்டு!

தமிழக மாணவர்கள் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கிறார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பது, அவரது வழக்கமான தேர்தல் அறிவிப்பு என்றுதான் ஆம் ஆத்மி கட்சியினரே தெரிவிக்கிறார்கள்.


ஏனென்றால், டெல்லி பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம், இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், அம்பேத்கார் பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்கள் டெல்லியில் உள்ளன. இதில் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் மத்திய அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகும். இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சேர தனி நுழைவுத் தேர்வு உண்டு.

டெல்லி பல்கலைக்கழகத்தின் 58 கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் படிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. உயர் கல்விக்கு மட்டும் மத்திய பல்கலைக்கழகங்களை போல் டெல்லி பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு உண்டு. இந்த பல்கலைக்கழகங்களில் எஸ்.சி, எஸ்.டி, காஷ்மீரிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகியோருக்கு தனி இட ஒதுக்கீடு உண்டு. மற்ற அனைவரும் பொதுப்பிரிவில்தான் சேர முடியும். அதனால் டெல்லி பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளில் மற்ற மாநில மாணவர்களைப் போலவே தமிழக மாணவர்களும் தேர்வு பெற்று நுழைகிறார்கள். 

உண்மையில் உ.பி., பீகார், ஹரியானா மாநிலத்தவர்களைவிட, குறைந்த எண்ணிக்கையில்தான் தமிழக மாணவர்கள் இங்கு இடம் பிடிக்கிறார்கள் என்பது உண்மை. இந்த உண்மை ஆம் ஆத்மிக்கு நன்றாகத் தெரியும். ஆனால், தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், டெல்லி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. அதனாலே, இப்படி ஒரு பிரச்னையைக் கிளப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் உண்மை இல்லை என்பது டெல்லி முதல்வருக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர் இப்படி அழுத்தம்திருத்தமாகப் பேசுவது, அங்கே படித்துவரும் தமிழக மாணவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்திவிடும் என்று தமிழக தலைவர்கள் அச்சப்படுகிறார்கள். வன்முறையைத் தூண்டுகிறாரோ அரவிந்த் கெஜ்ரிவால்.