சிலிண்டர் விலை ரூ.106 உயர்வு..! கிடுகி விலை அதிகரிப்பால் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 76 ரூபாய் உயர்த்தி உள்ளன எண்ணெய் நிறுவனங்கள்.


சென்னையை பொறுத்தவரை 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை தற்போது 696 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இண்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை டெல்லியில் 681 ரூபாய் எனவும், கொல்கத்தாவில் 706 ரூபாய் எனவம், மும்பையில் 651 ரூபாய் எனவும், சென்னையில் 696 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு நவம்பர் 1ம் தேதி அமலுக்கு வருகிறது. 

சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற பொருளாதார சூழ்நிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.  

கடந்த செப்டம்பர் மாதம் சிலிண்டரின் விலை 15 ரூபாய் 50 பைசா உயர்த்தப்பட்டது. அக்டோபர் மாதம் 15 ரூபாய் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் மாதம் 76 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கடந்த 3 மாதத்தில் 106 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

2018 நவம்பர் விலையை ஒப்பிடும்போது தற்போதைய விலை 250 ரூபாய் குறைவாகத் தான் சிலிண்டர்கள் மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் அரசு தரப்பினர்கள்.