திருமணத்திற்கு இன்னும் 4 நாட்கள் தான்! மணல் கடத்தலை தடுக்கச் சென்ற போலீஸ்காரருக்கு ஏற்பட்ட பயங்கரம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

திருமணம் நடைபெற 4 நாட்களே உள்ள நிலையில் விபத்து ஒன்றில் காவலர் உயிரிழந்த சோக சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ராஜீவ்காந்தி என்ற பெயர் கொண்ட காவலர் ஒருவர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களுடன் காட்பாடி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் காட்பாடியில் இருந்து லத்தேரி நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காரசமங்கலம் என்ற பகுதியில் எதிரே எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த லாரி ஒன்று போலீஸ் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் படுகாயம் அடைந்தனர். காவலர் ராஜீவ்காந்தி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் பரிதாபமாக உயிரிநத் ராஜீவ்காந்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

ராஜீவ்காந்தியனி தந்தை ஒரு வருடத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவரது தாயார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடந்த ஒரு வருடத்தில் பெற்றோரை இழந்த ராஜீவ்காந்திக்கு அவரது சகோதரர்கள் தான் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். டிசம்பர் 1 ஆம் தேதி ராஜீவ்காந்திக்கு திருமணம் நடைபெற இருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் தீவிரமாக செய்து வந்த நிலையில் இப்படி ஒரு சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.