திடீரென பாதை மாறி அதி தீவிர புயலானது ஃபானி! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

ஃபானி புயல் பாதை மாறி சென்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புயல் அபாயத்தின் நேரடி தாக்கத்தில் ஒடிசா கடற்கரை பகுதி இருக்கிறது. ஒடிசா,மேற்கு வங்கம், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீக்குளம், விஜயநகரம், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புயலுக்கான சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் நண்பகல் ஒடிசா மாநிலம் கோபால்பூர்க்கும், சந்தபாலிக்கும் இடையே தெற்கு பூரி பகுதிகளில் ஃபானி கரையை கடக்கிறது. கரையை கடக்கும் போது 175 முதல் 185 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும். அதிகபட்சமாக 205 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். 

கரையை கடக்கும் நிகழ்வுகள் இருக்காது என எதிர்பார்த்த நிலையில் ஒடிசாவில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளார். ஒடிசாவின் ஜெய்ப்பூர், கேந்ரப்பா உட்பட நான்கு  மாவட்டம், மேற்கு வங்கத்தில் கொல்கத்தா,ஹவுரா, ஹூக்லி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நெல், வாழை, பப்பாளி தென்னை போன்ற பயிர்கள், மரங்கள் சேதம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஒடிசாவின் ஐந்து மாவட்டத்தில் ரயில், பேருந்து போன்ற போக்குவரத்தை நிறுத்தவும், மக்கள் பாதுகாப்பாக வீடுகளில் தங்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.