மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

ஃபனி புயல் நெருங்கி வருவதால் தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்பு நிலை தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது சென்னையில் இருந்து சுமார் 1495 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளது. வரும் 29ந் தேதி இது புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக கடலோர மாவட்டங்களில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் ஆகியுள்ளது. அதன்படி கடலூர், புதுவை, நாகை, பாம்பன்  உள்ளிட்ட துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தடுத்து வானிலை மைய எச்சரிக்கையை கொண்டு புயர் கூண்டின் எண் மாற்றப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.