சூப்பர் ஜீரணத்துக்கு சீரகம்..ஒவ்வொரு உணவிலிருக்கும் சீரகம் உடலுக்கு எப்படியெல்லாம் உதவுகிறது பாருங்க

அஞ்சறைப் பெட்டியில் சீரகத்துக்கு தனியிடம் உண்டு. சமையலுக்கு சுவையும், மணமும் தருவதுடன் உடலுக்கு நலனும் அளிக்கிறது.


  • வயிறு மந்தம், செரிக்காமை, வாயுத் தொல்லை போன்ற பிரச்னைகளுக்கு சீரகத்தை அரைத்துக்குடித்தால் உடனே குணம் தெரியும்.
  • சீரகத்தை வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  • சீரகத்தை மென்று தின்றால் தலைசுற்று குணமாகும். பித்தம் குணமாகும். சீரகத்தண்ணீர் ஜீரணம் தரும்.
  • தோல் பளபளப்பாக மாறுவதற்கும் உடல் குளிர்ச்சி அடைவதற்கும் சீரகத்தை தினமும் மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.