டிக்டாக்ல வீடியோ போட்டாரு..! இப்போ என் புருசனை அவ புருசன்ங்றாங்க..! குழந்தைகளுடன் வந்து கதறிய இளம் மனைவி! பண்ருட்டி பரிதாபம்!

கடலூரில் திருமணமான ஒருவர் டிக்டாக் தொடர்பினால் தனது மனைவின் தோழிவுடன் குடுத்தனம் நடத்தும் விவகாரம் மனைவிக்கு தெரிய வர அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடலூர் மாவட்டம் கீழிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர், சுகன்யா என்ற தம்பதியற்கு மூன்று வயது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர், டிக்டாக் செய்து வழக்கம். அதன் காரணமாக சில மாதங்களில் டிக்டாக்கிற்கு அடிமையானர் . இதற்டையில், டிக்டாக் மூலம் மனைவியின் தோழியான அறந்தாங்கியை சேர்ந்த கவிநயா என்ற பெண்ணுடன் சேர்ந்து இவர் அடிகடி டிக்டாக் செய்து வழக்கனாக கொண்டு உள்ளார்.

பின்னர் இந்த தொடர்பு காதலாக மாறியுள்ளது. இந்நிலையுல் இருவரும் சேர்ந்து குடுத்தனம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த விவகராம் மனைவிக்கு தெரிய வர கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சுகன்யா மனு அளித்தார். அந்த மனுவின் அடிப்படையில் ராஜசேகர் மீது பண்ருட்டி மகளிர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக ராஜசேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சமூகத்தை கெடுக்கும் டிக்டாக் போன்ற செயலியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.