வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வெள்ளரி போதுமே!

வெயில் காலத்தில் ஏற்படும் நா வறட்சியைப் போக்கவும் உடல் சூட்டைத் தணிக்கவும் வெள்ளரிக்காயில் மிகுந்துள்ள நீர்ச்சத்து உதவி செய்கிறது. பசியை உண்டாக்கி உடலைக் குளிர வைக்கும் வெள்ளரியில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. இது செரிமானத்தை அதிகரிக்கப் பயன்படுவதுடன் ரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கவும் உதவுகிறது.


* வெள்ளரியில் இருக்கும் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், கந்தகம், குளோரின், இரும்பு போன்றவை உடலுக்கு வலிமை தருகின்றன.

* புகை பிடிப்போரின் குடலை சீரழிக்கும் நிகோடின் நஞ்சுவை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு.

* இரவும் பகலுமாக வேலை செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்கு குளிர்ச்சியும் மூளைக்குப் புத்துணர்ச்சியும் வழங்குகிறது வெள்ளரிக்காய்.

களைப்படைந்த கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வெள்ளரி சரும அழகுக்கும் பல வழிகளில் பயன் தருகிறது. சளி, இருமல் இருக்கும் காலங்களில் மட்டும் வெள்ளரியை ஒதுக்குவது நல்லது.