82 பந்துகளில் 101 ரன்கள் குவித்த நிலையில் வெற்றிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதும் அவசரப்பட்டு ஆட்டம் இழந்த பிராத்வெய்ட் மைதானத்தில் கதறி அழுதார்.
82 பந்துகளில் 101 ரன்! கடைசி வரை போராடியும் வீண்! கதறி அழுத பிராத்வெய்ட்!
மான்செஸ்டர் மைதானத்தில் நியுசிலாந்து நிர்ணயித்த 292 ரன்கள் இலக்கை நோக்கி மேற்கிந்திய தீவுகள் விளையாடியது. கிறிஸ் கெயில் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் 170 ரன்களை எடுப்பதற்குள் மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பிறகு களம்இறங்கிய பிராத்வெயிட் ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.
நியுசிலாந்து வீரர்கள் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து அவர் ரன்களை குவித்தார். இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி இலக்கை நோக்கி வேகமாக முன்னேறியது. 48வது ஓவரில் மட்டும் ஹேட்ரிக் சிக்சர் அடித்து 25 ரன்கள் குவித்தார்.
இதனால் 12 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் மேற்கிந்திய தீவுகள் வலுவான நிலையில் இருந்தது. பிராத்வெய்ட் மேற்கிந்திய தீவுகளை எளிதாக வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நீசம் 49வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை பிராத்வெய்ட் அடிக்க அது டிரென்ட் போல்டிடம் கேட்சாக மாறியது. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியுசிலாந்து வெற்றி பெற்றது. கடைசி வரை போராடிய பிராத்வெய்ட் செய்த சிறிய தவறு அந்த அணி தோற்க்க காரணமாகிவிட்டது.
இதனால் மைதானத்தில் மண்டியிட்டு பிராத்வெய்ட் கதற ஆரம்பித்துவிட்டார். அவரை நியுசிலாந்து வீரர்கள் ஆறுதல் படுத்தி அழைத்துச் சென்றனர். 82 பந்துகளை எதிர்கொண்ட பிராத்வெய்ட் 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.