பசு மாட்டை ஒதுக்குப்புறமாக அழைத்துச் சென்று ரேப் செய்த 3 இளைஞர்கள்! திருப்பூரை அதிர வைத்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இரவுநேரத்தில் பசுமாட்டை திருட்டுத்தனமாக அவிழ்த்துச்சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 வடமாநில இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பெருமாக்கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி, இவர் தனது பசுமாட்டை வீட்டிற்கு வெளியில் கட்டி சென்றுள்ளார். நள்ளிரவு பசு மாடு கத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளார்.அப்போது தனது பசுமாட்டை காணவில்லை என்பதும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்களின் உதவியுடன் பசுமாட்டை தேட தொடங்கியுள்ளார். அப்போது அங்கு இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஒரு குட்டி சுவர் பகுதியில் 3 வடமாநில இளைஞர்கள் பசு மாட்டை கட்டி வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் அதை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர். மற்றும் அவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் எங்கே வேலை பார்க்கிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்திய போலீசார் அருகில் உள்ள கல்குவாரியில் கூலித் தொழிலாளியாக வேலை பார்ப்பவர்கள் என்பதை உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் மூவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.