இன்ஸ்பெக்டர் மீது பொய் செக்ஸ் புகார்! இளம் பெண் தாயுடன் சிக்கினார்!

திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் ஒருவர் மீது இளம் பெண் பாலிய வழக்கு தொடர்ந்த நிலையில் அது ஆதாரமற்ற பொய்ப்புகார் எனக்கூறி நீதிபதி தள்ளுபடிசெய்தார்.


சென்னை சூரப்பட்டைச் சேர்ந்த ராதிகா என்ற பெண் மீது ஜெய்கரன் என்பவர் அளித்த மோசடிப் புகாரின் பேரில் அவரை காவல் ஆய்வாளர் நடராஜ் புழல் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்திருந்தார். அப்போது ராதிக தனது மகளுடன் காவல் நிலையத்துக்கு சென்றார். 

இந்நிலையில் தன்னை இன்ஸ்பெக்டர் நடராஜ் தனியாக  விசாரணைக்கு அழைத்து பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாகவும், அவர் மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை கோரியும் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் ராதிகாவின் மகள் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பரணிதரன் இந்தப் புகார் அடிப்படை ஆதாரமற்றதாகவும், நம்பகத்தன்மை இல்லாததாகவும் இருப்பதாகத் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் மீது  தொடரப்பட்ட வழக்கை பொய் வழக்காக கருதி தள்ளுபடி செய்தாகவும் உத்தரவிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காவல் ஆய்வாளர் நடராஜ் அந்தப் பெண் தன்மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்து பொய் என்றார். பணம் சம்பாதிக்கும் நோக்குடன் சில வழக்கறிஞர்கள் இது போன்ற பெண்களை வைத்து பொய் வழக்குகளை தொடர்ந்து களங்கம் விளைவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஏற்கனவே சொந்த தந்தையின் மீதே  அந்தப் பெண் பாலியல் வழக்கு தொடர்ந்ததாகவும் ஆய்வாளர் தெரிவித்தார்.

இதனிடையே பொய்யான புகார் அளித்த காரணத்திற்காக அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.