,திருமணமாகி 6 வருடங்கள் குழந்தை இல்லை! திடீரென கர்ப்பமான ஜெரினா! ஆனால் கணவனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் காரணம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடன் தொல்லைக் காரணமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.


கிருஷ்ணகிரி செல்லாண்டி நகரில் லாரி ஓட்டுநர் குமரன் - ஜெரினா தம்பதி வசித்து வந்தனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுதான் ஜெரினா கர்ப்பம் தரித்துள்ளார்.  

இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்னர் உறங்கச் சென்றவர்கள் காலையில் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்கள் இரண்டு பேரும் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல்அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை குமரன் - ஜெரினா தம்பதி உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தது. பின்னர் ஜெரினா உயிரிழப்பதற்கு முன் எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணத்தை தெரிந்து கொண்ட அக்கம் பக்கத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதாவது "எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. ஆனால் நிறைய கடன் வாங்கிவிட்டோம், எங்களால், அந்த கடனை திருப்பி தர முடியவில்லை. நிம்மதியாக வாழவும் முடியவில்லை. அதனால்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். சொந்தக்காரர்கள் யாராவது, எங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்று, கடன்களை அடைக்குமாறு தெரிவித்து கொள்கிறேன்" என்று எழுதி இருந்தார்.

இதை அடுத்து ஜெரினா எதற்காக கடன் வாங்கினார்? யார் அவ்வளவு கடன் கொடுத்தது, கந்து வட்டிக்கு கடன் கொடுத்து மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.