இயற்கையாக 2 முறை இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த அபூர்வ பெண்மணி! டாக்டர்களையே மிரள வைத்த பிரசவம்! எப்படி தெரியுமா?

லண்டன்: சொல்லி வைத்தாற் போல , தொடர்ந்து 2வது முறையாக இரட்டைக் குழந்தைகளை பெண் ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.


பிரிட்டனின் ஸ்ரோப்ஷைர் பகுதியை சேர்ந்தவர்கள் கினா ஷெல்டன் (30 வயது), ஓலி லாயிட் (33 வயது). இந்த தம்பதியினருக்கு,  கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், 3 ஆண்டுகள் இடைவெளிவிட்டு, அடுத்த குழந்தையை பெற்றெடுக்க மருத்துவமனை சென்ற கினாவுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

ஆம், அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இவ்விரு குழந்தைகளும் நலமுடன் வளர்ந்து வரும் நிலையில், தற்போது 3வது முறையாக கினாவுக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. இதில், ஒரு இன்ப அதிர்ச்சியாக, மீண்டும் இரட்டைக் குழந்தைகளே அவருக்கு பிறந்துள்ளன. ஆம், இந்த முறை இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன.

3 மாதங்கள் கடந்த நிலையில் அவ்விரு குழந்தைகளும் நலமுடன் உள்ளன. இது மனித குல வரலாற்றில் அதிசயமான நிகழ்வு என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரே பெண், சொல்லி வைத்தாற்போல, தொடர்ச்சியாக 2 முறை இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுப்பது, தற்கால வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். அந்த வகையில் கினா ஷெல்டன் பெயர் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ளது.  

தொடர்ச்சியாக, 2 முறை இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுக்கும் இத்தகைய அரிய வாய்ப்பு, 7 லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே அமையும் எனக் கூறப்படுகிறது.