ராஜேஸ்வரி எந்திரி..! காஃபி போடனும்! மனைவியை எழுப்பிய கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பிறகு நிகழ்ந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

சென்னையில் மனைவி உயிர் பிரிந்தை அறிந்த கணவன் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும், வாழ்ந்தாள் இவர்கள் போன்று வாழ வேண்டும் . வாழ்விலும் சாவிலும் ஒன்றாக சேர்ந்த தம்பதிகளை பற்றி பொதுமக்கள் கண்ணீர் மல்க கூறினார்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் லோக நாராயணன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதினர் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்த தம்பதினர்க்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் லோக நாராயணனும் ராஜேஸ்வரியும் தனியாக வசித்து வந்தனர். 

கடந்த சில மாதங்களாக ராஜேஸ்வரிக்கு உடல் நிலை குறைவாக இருந்துள்ளது. திடீரென ராஜேஸ்வரி அவர்களுக்கு நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய ராஜேஸ்வரி நலமாக இருந்தார்.

இதற்கிடையில், மனைவின் உடல் நிலையை எண்ணி லோக நாராயணன் மன வேதனையடைந்து காணப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம், காலையில் கண்விழித்த லோக நாராயணன், வீட்டில் பால் காய்ச்சியுள்ளார். காபி போடுவதற்காக மனைவியை எழுப்பியபோது அவர் கண்விழிக்கவில்லை. மேலும், அவரின் உடலிலும் எந்தவித அசைவும் இல்லை மனைவி இறந்துவிட்டதை உணர்ந்த லோக நாராயணன் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில், வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் நேற்று திறக்கப்படவில்லை என்று எண்ணி அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது லோக நாராயணனும், அவரின் மனைவியும் படுத்திருந்தது தெரிந்தது.   

அவர்களுக்கு சந்தேகம் வர லோக நாராயணனின் மகன்களுக்கும் மகள்களுக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் அனைவரும் கதவை உடைத்து உள்ளே சென்றுப் பார்த்தனர். அப்போது இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்ததை அறிந்த தம்பதியின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இயற்கை மரணம் என்பதனால் காவல் துறையினர்க்கு எவ்வித தகவல் கொடுக்கமால். வழக்கம் போல், இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு நடந்தது. இதுகுறித்து லோக நாராயணன் குடியிருக்கும் பகுதியில் வசிப்பவர்கள் கூறுகையில், லோக நாராயணன், மனைவி ராஜேஸ்வரி மீது அதிக பாசம் கொண்டவர். இருவரும் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துப் பேசமாட்டார்கள். வாழ்ந்தாள் இவர்கள் போன்று வாழ வேண்டும் ! வாழ்விலும் சாவிலும் ஒன்றாக சேர்ந்த தம்பதிகள் என்று நெகிழ்ச்சியாக சற்று சோகமுடன் கூறினார்கள்.