தானே: வரதட்சணை கேட்டு மருமகளை சித்ரவதை செய்த காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
மருமகளிடம் மாமனார் செய்யும் காரியமா இது? அத்துமீறிய காங்கிரஸ் கவுன்சிலர்! அதிர்ச்சியில் குடும்பம்!
மகாராஷ்டிரா மாநிலம், தானே அருகே உள்ள பிவாண்டி நிஜாம்பூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பாக, கவுன்சிலராக இருப்பவர் சித்தேஸ்வர் கம்மூர்த்தி. 60 வயதான இவர் தனது மகன் ஸ்ரீகாந்துக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த பெண்ணை வரதட்சணை கேட்டு, சித்தேஸ்வர், அவரது மனைவி காவேரி, மூத்த மகன் சங்கீத் மற்றும் இளைய மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் கொடுமை செய்வதாக, புதுமணப்பெண் போலீசில் தற்போது புகார் அளித்துள்ளார்.
வரதட்சணை கொடுமையின் ஒருபகுதியாக, கர்ப்பம் தரித்த அப்பெண்ணை டார்ச்சர் செய்து, கருவை கலைக்கவும் செய்துள்ளனர். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வேதனை உள்ளதாக, அவர் போலீசில் குறிப்பிட்டுள்ளார். இதையேற்று, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் இப்படியான புகாரில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.