கொரோனாவுக்கு பெண்களை விட ஆண்களைத்தான் அதிகம் பிடிக்குமாம்..! ஏன் தெரியுமா? உடனே தெரிஞ்சிக்கிங்க..!

சென்னை: 45 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களைத்தான் கொரோனா மிக வேகமாக தாக்குவதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றி வித விதமான அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி வருகின்றன. மக்கள் அனைவரும் பீதியில் உள்ள நிலையில்,   பல நாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 298 ஆக உள்ளது. இதுவே உலகம் முழுக்க 2,78,469 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். 11,554 பேர் உயிரிழந்துள்ளனர்.  

இந்நிலையில், ஆண்களைத்தான் கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களில்  அதிகம் பேர் ஆண்கள்தான். அதிலும், 45 வயதுக்கு மேலான ஆண்கள் அதிகம் பேர் உள்ளனர்.   இதன் அடிப்படையில், பெண்களைவிட ஆண்களைத்தான் கொரோனா பாதிப்பதாக உறுதியாகியுள்ளது. 40 வயதை கடந்துள்ள நடுத்தர வயது ஆண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கும்படி  மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

குறிப்பாக, சீனாவில் கொரோனாவைரஸ் பாதித்து பலியானவர்களில் 62% பேர் ஆண்கள்தான். இதேபோல, இத்தாலியில் 68% ஆண்கள், அமெரிக்காவில் 57% ஆண்கள், பாதிக்கப்பட்டுள்ளனர். ஈராக், ஸ்பெயின் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களில்  அதிகம் பேர் ஆண்களாகவே உள்ளனர். எனவே, நடுத்தர வயது ஆண்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியுள்ளது.