எமனாக வந்த லாரி! சிதைந்த அழகிய குடும்பம்! பதற வைத்த விபத்து!

திருவள்ளூர் அருகில் கார் மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உட்பட ஒரேக் குடும்பத்தை சேர்ந்த 3பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர், சாய் சந்திரசேகர், மனைவி புஷ்கலா, இரண்டு மகன்களுடன் திருப்பதி சென்றுவிட்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திருவள்ளூர் ,நாராயணபுரம் அருகே  கார் வந்துக்கொண்டிருந்த போது எதிரே கட்டுபாடு இழந்த  கண்டெய்னர் லாரி , நிலைத்தடுமாறி காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில், சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே உயிழந்ததை அடுத்து படுகாயமடைந்த  மனைவி புஷ்கலா, மகன்கள் கைலாஷ், சாய் தருண் மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனர்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி  புஷ்கலா மற்றும் சாய் தருண் பரிதாபமாக உயிரிழந்தை அடுத்து இரண்டாம் மகன் கைலாஷ் போதிய சிகிச்சைக்கு பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார். எதிர்பாராத இந்த கோர விபத்து சிறுவனின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

மேலும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடியக்  கண்டெய்னர் லாரி டிரைவரை காவலத் துறையினர் தேடிவருகின்றனர்.