காண்டம் இல்லாமல் பக்கத்தில் வராதீங்க..! கணவன்களுக்கு எதிராக ஒன்று சேரும் மனைவிகள்! ஏன் தெரியுமா?

கருத்தடை விவகாரத்தில் ஆண்களும் பெருமளவு பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று நூதன இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.


மக்கள் தொகை கட்டுப்பாட்டில் இந்தியாவைப் பொறுத்தவரையில் நாமிருவர் நமக்கொருவர் என்ற என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 75 விழுக்காட்டினர் இதை கடைபிடித்து வருகின்றனர். மீதமுள்ளவர்கள் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தி அடுத்த குழந்தை பிறப்பை தள்ளிப் போடுகின்றனர்.

கருத்தடை சாதனங்களைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு ஆணுறை ஒன்று மட்டுமே வழி. அதேவேளையில் பெண்களை எடுத்துக்கொண்டால் குடும்ப கட்டுப்பாடு மற்றும் காப்பர் டி என்ற இரு வழிகள் உள்ளன. ஆனால் திட்டமிட்டவாறு அல்லாமல் திடீரென்று கரு உண்டாகும் பட்சத்தில் அதற்கான முழு பொறுப்பும் பெண்ணின் தலை மீது விழுகிறது.

இது தவறு என்றும் இதில் ஆண்களை பெரும்பாலும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்தியாவில் ஒரு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி மக்கள் தொகை நாள் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் இந்திய மக்கள்தொகை அமைப்பு என்ற தொண்டு நிறுவன மானது இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி ஆண்கள் ஆணுறை பயன்படுத்துவதை தவிர்க்க கூடாது என்பதை வலியுறுத்தி ஒரு பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பியுஷ் கனோஜியா என்ற இசை அமைப்பாளர் இசையமைத்துள்ள காண்டம் போல் என்ற பாடல் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளது.