ராம்நாடு முழுக்க தண்ணி பஞ்சம்!ஆனா‌ இந்த கிராமத்துல மட்டும் 3 போகம் அமொகம்! நீர் மேலாண்மையில் அசத்தும் செவல்பட்டி மக்கள்!

ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தற்போதைய காலம் வரை மழை நீரை சேமித்து வைத்து குடிநீர் பஞ்சத்தை விரட்டியடித்த கிராமம் ஒன்று ராமநாதபுரத்தில் உள்ளது.


ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவிற்கு உட்பட்ட செவல்ப்பட்டி கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  விவசாயிகள் மிளகாய் வெங்காயம், பாசிப்பருப்பு, உளுந்து, சோளம், கேழ்வரகு, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்டவறறை சாகுபடி செய்து வருகின்றனர்.

செவல்ப்பட்டி கிராமத்தில் முன்னோர்கள் ஊர் கூடி தங்களது கிராமத்தில் உள்ள ஒரு ஊரணியை தூர்வாரி ஆழப்படுத்தி அந்த ஊரணியை சுற்றிலும் முள்வேலிகளை அமைத்து தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்திருந்தன. அந்த வகையில்  மழை காலத்தில் கிடைக்கும் தண்ணீரை கால்வாய் வழியாக ஊரணிக்கு கொண்டு சென்று ஊரணியை சுற்றிலும் முள்வேலிகளை அமைத்து சுத்தமாக பாதுகாத்து சுகாதாரமான முறையில் பயன்படுத்தி வந்தனர்.

தற்போதும் அந்த ஊரணியில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆடு மாடு உள்ளிட்ட எந்த ஒரு கால்நடைகளையும் அனுமதிப்பதில்லை. மனிதர்கள் கூட குடிநீர் தேவையை தவிர்த்து மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தாத வகையில்கட்டுபாட்டு உணர்வுடன் உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடும் வறட்சியால் விவசாயம் பொய்த்து போன நிலையில் பல்வேறு கிராமங்களில் தற்போது கோடை காலத்தில் நிலவி வருகிறது.  கடும் குடிநீர் பஞ்சம் உள்ளது. இதனால் மக்கள் பரிதவித்து வரும்  நிலை அங்கு தொடர் கதையாக உள்ளது.

இவற்றிக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழகத்திற்கே எடுத்துக்காட்டாக  செவல்ப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு குடிநீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

செவல்ப்பட்டி கிராமத்தை போன்று மற்ற கிராமங்களும் தங்களது குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள தங்களது கிராமத்தில் உள்ள ஊரணியை தூர்வாரி மழை காலத்தில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து முள்வேலிகளை அமைத்து பயன்படுத்தினால் எந்த ஒரு காலத்திலும் குடிநீர் பற்றாக்குறை இருக்காது.