கல்லாப்பெட்டிக்கும் பரிசு பெட்டிக்கும் தான் போட்டி! கோவையில் அனல் கக்கிய தினகரன்!

நாடாளுமன்றத் தேர்தல் என்பது கல்லாப்பட்டி அதிமுகவுக்கும் பரிசு பெட்டியான தனது கட்சிக்கும் இடையிலான போட்டி என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி கோவை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தினகரன் என்று பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் தனது கட்சிக்கு குப்பையில் போடக்கூடிய ஏதேதோ சின்னங்களை கொடுத்ததாக தினகரன் தெரிவித்தார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே பரிசு பெற்ற நமது கட்சிக்கு கிடைத்ததாகவும் அவர் கூறினார்.

எனவே இந்த தேர்தல் என்பது கல்லாப்பெட்டி யான எடப்பாடி பழனிசாமி க்கும் பரிசு பெட்டியான நமக்கும் இடையே நடைபெறும் தேர்தல் தான் என்று தினகரன் கூறினார். ஆர் கே நகரில் எப்படி சுயேச்சையாக நின்று அதிமுக திமுகவை வீழ்த்தினோம் அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் இடைத் தேர்தலிலும் அதிமுக திமுகவை நமது கட்சி வேட்பாளர்கள் வீழ்த்துவார்கள் என்று தினகரன் கூறினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை மோடி தன்னைத்தான் எதிரியாக நினைப்பதாகவும் இதேபோல் எடப்பாடியும் கூட நமது கட்சியைத்தான் போட்டியாக கருதுவதாகவும் தினகரன் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் மோடிக்கும் எடப்பாடிக்கு பாடமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.