6 வயதிலேயே தந்தைக்கு சொந்த வீடு வாங்கிக் கொடுத்த குட்டி தேவதை! நெகிழும் கொட்டாச்சி!

தன் மகள் மானஸ்வி மற்றும் தனது மனைவி ஆகிய இரு தேவதைகளால் தனது சொந்த வீட்டுக் கனவு நனவானதாக நடிகர் கொட்டாச்சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சுட்டி நாயகி, 'மானஸ்வி'. அவரது குடும்பத்தினர் சென்னையில் சொந்த வீடு வாங்கியே தீரவேண்டும் என்ற கனவை நனவாக்கியுள்ளனர். தங்களது 15 ஆண்டுக் கனவு நனவாகியுள்ளதாக தெரிவித்தார் மானஸ்வியின் தந்தையான நடிகர் கொட்டாச்சி.

சென்னை வந்த தொடக்கத்தில் மான்ஷனில் வாழ்க்கை தொடங்கிய நிலையில் பின்ன்னர் 800 ரூபாய் வாடகையில் வீடு எடுத்ததாகக் கூறுகிறார் கொட்டாச்சி. பின்னர் 2000 ரூபாய்க்கும் 7000 ஆயிரம் ரூபாய்க்கும் பின்னர் 15 ஆயிரம் ரூபாய் வாடகையிலும் வீடு எடுக்கும் அளவுக்கு வளர்ந்தாலும், சொந்த வீடு இன்றி இந்த அளவுக்கு வாடகை கொடுப்பது குறித்து மிகவும் வருத்தப்பட்டு வந்ததாக அவர் தெரிவித்தார். 

தன் மகள் மானஸ்வி பிறந்த பிறகு நல்லவை நடக்கத் தொடங்கியதாகக் அவர் கூறினார். 3 வயதில் மானஸ்வி நடிக்கத் தொடங்கிய நிலையில் தனது மனைவியும் டப்பிங் பேசியதன் மூலம் வீடு வாங்க முயற்சி எடுத்ததாகக் கூறுகிறார். இந்நிலையில் தற்போது தனது மகளின் 6-வது வயதில் தங்களது சொந்த வீட்டுக் கனவு நனவாகியிருப்பதாகவும் மே 1-ஆம் தேதி பால் காய்ச்சியதாகவும் தெரிவித்தார். 

மகள் மானஸ்வி நடிக்க துவங்கியுள்ளதாலும், அவருக்கு நிறைய வாய்ப்புகள் வருவதாலும் லோன் போட்டு கொட்டாச்சி இந்த வீட்டை வாங்கியுள்ளார். இதன் மூலம் தந்தைக்கு 6 வயதிலேயே மகள் மானஸ்வி வாங்கி கொடுத்துள்ளார்.