ஒருவேளை தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதால் அது எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு பரவக்கூடாது என்பதற்காக சீனாவில் செவிலியர் ஒருவர் மொட்டை அடித்துக்கொண்டார்.
என்னிடம் இருந்து கொரோனா வைரஸ் வேறு யாருக்கும் பரவக் கூடாது..! இளம் நர்ஸ் செய்த நெகிழ வைக்கும் செயல்! என்ன தெரியுமா?
சீனா முதல் உலகத்தின் பல்வேறு நாடுகள் வரை தற்போது அச்சுறுத்தி வருவது தீவிரவாதத்தை விட கொடிய விஷயம் கொரோனா வைரஸ் தாக்குதல். இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டு சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கை தாண்டியது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒருவருக்கு தாக்கிய நோய் அவர் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதால் பல்வேறு இடங்களில் காலவரையறை இன்றி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோரும் முகத்தில் முகமூடி அணிந்துதான் செல்கின்றனர். தற்போது அங்கு முகமூடிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே ஒருவேளை தனக்கு கொரோனா வைரஸ் தாக்கினால் அது வேறு யாருக்கும் எந்த விதத்திலும் பரவக்கூடாது என முடிவு எடுத்த செவிலியர் மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இவர் தற்போது வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் பெயர் ஷான் சியா. நோய் மற்றவர்களுக்கு தொற்றுவதை தவிர்ப்பதற்காகவும், மருத்துவ பாதுகாப்பு ஆடைகளை அணிந்துகொள்வதற்கான நேரத்தை மிச்சப்படுத்துவதற்காகவும் தலையை மொட்டையடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.