சுசித்ரா எனக்கு இல்லனா, வேற யாருக்கும் இல்ல! ஆசிட்டால் இளம் மாணவி முகத்தை சிதைத்த முத்தமிழன்!

தனக்கு கிடைக்காதது வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனநிலை இளைஞர்களிடையே மாறுவதாக தெரியவில்லை. காதலித்த பெண் கிடைக்காத ஆத்திரத்தில் அவள் மீது அமிலத்தை ஊற்றிய மற்றுமொரு சம்பவம் அரங்கேறி உள்ளது.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நாகை மாவட்டம் பழைய கூடலூரை சேர்ந்த முத்தமிழன் என்பவரும், நடுவெளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா என்பவரும் உடற்கல்வித் துறையில் பி.பி.எஸ். பிரிவில் 2ம் ஆண்டு படித்து வந்தனர். இருவரும் உறவினர்கள் என்பது மட்டும் அல்லாது கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில் பல வருடங்களாக காதலித்து வந்த சுசித்ரா திடீரென முத்தமிழனுடன் பழகுவதை நிறுத்தியதா தெரிகிறது. இதனால் மனவேதனைக்கு ஆளானார் முத்தமிழன். பலமுறை கெஞ்சியும் சுசித்ரா செவி சாய்க்காததால் மன உளைச்சலில் இருந்த முத்தமிழன் 3 நாட்களுக்கு முன்னர் சொந்து ஊருக்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர் உறவினர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். சிகிச்சை முடிந்து பல்கலைக் கழகத்திற்கு சென்ற முத்தமிழன் மாலையில் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திற்கு சென்றார். அங்கு சுசித்ராவுடன் வேறு ஒரு இளைஞன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சுசித்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் ஆத்திரத்தில் கையில் மறைத்து வைத்திருந்த அமிலம் எனப்படும் ஆசிட் பாட்டிலை திறந்து சுசித்ரா மீது வீசினார். கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட் வீசியதில் சுசித்ரா துடி துடித்து அலறினார்.

இதில் மாணவியின் முகம், முதுகு, கை, உதடு ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. மாணவியின் அலறல் சத்தம் கேட்டு சக மாணவர்கள், பொதுமக்கள் மாணவியை மீட்டதோடு மட்டுமல்லாமல் முத்தமிழனை தரும அடி கொடுத்து தாக்கினார்.

இதனால் அவர் பலத்த காயம் அடைந்தார். பின்னர் இருவரும் மீட்கப்பட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.