திருமணமாகி ஒரே மாதம்! 4 மாத கர்ப்பமான மனைவி! அதிர்ச்சியில் உறைந்த கணவன்! அம்பலமான பகீர் காரணம்!

திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் 4 மாத கர்ப்பம்.. விசாரணையில் அதிர்ச்சியான தகவல் கிடைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சிவகங்கையை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சென்னை வாலிபருடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில வாரங்களிலேயே இளம்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டு வந்துள்ளதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் 4 மாத கர்ப்பம் என தெரியவந்துள்ளது. 

திருமணமான ஒரே மாதத்தில் எப்படி 4 மாத கர்ப்பம் அடைந்திருக்க முடியும் என விசாரித்துப் பார்த்ததில், அதிர்ச்சிகர தகவல் மாப்பிள்ளை வீட்டாருக்கு கிடைத்திருக்கிறது. இளம்பெண் தான் படித்த தனியார் நர்சிங் கல்லூரியில், கல்லூரியின் தாளாளர் சிவகுரு துரைராஜ் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்துள்ளார். 

தற்போது கல்லூரியின் தாளாளர் மீது சிவகங்கை போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று இன்னும் சில பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் சிவகுரு துரைராஜை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.