உன் கண்ணு கிறங்க வைக்குது! வர்றியா..? திருமணமான பெண்ணை அழைத்த போலீஸ் எஸ்ஐ!

கோவையில் போலீஸ்காரர் ஒருவர் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணை வழிமறித்து "ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்க ,உன் கண்ணு சூப்பரா இருக்கு" என்று ஆபாச வார்த்தைகளை பேசியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மனைவி சரண்யா இவர் நேற்று பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து கீரணத்தத்தில் உள்ள தன் தாயை பார்க்க இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் அத்திப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடையை கடந்து சென்று கொண்டிருக்கும் போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் சரண்யாவை பார்த்ததும் அவரது வாகனத்தை நிறுத்த வந்துள்ளார்.

அப்போது அதை கண்டுகொள்ளாத சரண்யா தனது இரு சக்கர வாகனத்தை வேகமாக சென்றுள்ளார். இந்நிலையில் அந்த அதிகாரி தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சரண்யாவை பின்தொடர்ந்து வந்துள்ளார். உடனே அதிர்ச்சியடைந்த சரண்யா தனது வாகனத்தை வேகமாக ஓட்ட தொடங்கியுள்ளார். இந்நிலையில் விடாமல் பின்தொடர்ந்து வந்த காவல் அதிகாரி சரண்யாவின் முந்திச் சென்று அவரது வாகனத்தை நிறுத்தியுள்ளார்.  

அப்போது மிகுந்த மதுபோதையில் இருந்த அந்த நபர் சரண்யாவிடம் "ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே.. உன் கண்ணு சூப்பரா இருக்கு" இன்றும் பலர் ஆபாச வார்த்தைகளை கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரண்யா காவல் அதிகாரியிடம் சண்டையிட்டு திரும்பவும் தனது வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். இந்நிலையில் விடாமல் பின்தொடர்ந்துள்ளார் அந்த போதை காவல் அதிகாரி இதனால் ஆத்திரமடைந்த சரண்யா செல்போன் மூலம் தனது கணவருக்கு தகவலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவரது கணவர் தனது நண்பர்களுடன் புறப்பட்டுள்ளார். சரண்யா சிறிது தூரத்தில் சென்று தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கு உள்ள பேன்சி ஸ்டோரின் உள்ளே சென்றுள்ளார்.அவரை பின் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் வந்துள்ளார். அப்போது அவரது கணவர் அவரது நண்பர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

 இந்த நிலையில் அப்பகுதியில் கூட்டம் கூடியது இதையடுத்து வந்திருந்தவர்களும் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர் வந்த வாகனத்தை பார்த்தபோது அதில் நிறைய மதுபான பாட்டில்கள் இருப்பதை பார்த்து பொதுமக்கள் அவரை எச்சரித்துள்ளனர்.

இவ்வாறு செய்வது தவறு அது மட்டுமில்லை உங்கள் உடைக்கு தான் மரியாதை தருகிறோம் எனக் கூறி அவரை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தியதில் பெயர் பிரபாகரன் என்பதும் காவல்துறை அதிகாரியின் ஓட்டுனராக பணிபுரிபவர் என்பது தெரியவந்தது . இந்நிலையில் மாவட்ட எஸ்பி பிரபாகரனை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.