திருமணமான நாள் முதல் உடல் உறவுக்கு மறுப்பு..! முஸ்லீம் மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீத அனுபவம்! கோவை சம்பவம்!

கேட்ட வரதட்சனையை கொடுக்காத மனைவியை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்ய முயன்ற புகாரில் கணவர் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்த சம்பவம் கோவையில் முதன்முதலாக நடந்துள்ளது.


வரதட்சனை கேட்டு தன்னை துன்புறுத்தியதாக 24 வயது பெண் அளித்த புகாரில் 26 வயது இஸ்லாமியர் மற்றும் உறவினர்கள் 6 பேர் மீது இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். 

கடந்த ஜூலை மாதம் 4ம் தேதி முகமது அலி என்பவருக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் ஆன நாள் முதலே பெண்ணிடம் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. முகமது அலியின் குடும்பம் 80 சவரன் நகையை கேட்டதாகவும், ஆனால் 40 சவரன் நகை மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் இதனால் மீதி நகைகளை கேட்டு அடிக்கடி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நகைகள் கொடுக்க பெற்றோரால் இயலவில்லை என கூறி அந்த பெண்ணை அவதூறாக பேசியதாகவும், கணவனுடன் குடும்பம் நடத்த அனுமதிக்கவில்லை எனவும் விசாரணையில் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆன 3வது நாள் கேரளாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணின் படத்தை காண்பித்த முகமது அலி, இவளைத்தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இதை மனைவி மறுக்கவே ​​அவரை பார்த்து 'தலாக்' என்று மூன்று முறை சொல்லியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரில் கணவர் முகமது அலி, அவரது 2 சகோதரிகள், சகோதரர், மைத்துனர், தந்தை, தாய் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளது போலீஸ். முத்தலாக் தடை சட்டம் குறித்து இஸ்லாமிய இளைஞர்களிடைய போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து விடுவதாக சிலர் தெரிவித்தனர்.