2 பேருமே மாற்றுத் திறனாளிகள்! துடிக்க துடிக்க குழந்தைகளை தூக்கில் தொங்கவிட்ட தாய்! பதைபதைக்க வைக்கும் காரணம்!

கோவையில் இரண்டு மாற்று திறனாளி குழந்தைகளை தூக்கில் மாட்டிய தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.


கோவை மாவட்டம் , நல்லம் பாளையம் அருகில் வசித்து வந்த கெளரி வுக்கும் அவரது கணவருக்கும் திவ்யதர்ஷினி மற்று பிரனேஷ் என இரு பிள்ளைகள் இருந்துள்ளனர். இரண்டு குழந்தைகளும் மாற்றுத்திறனாளிகள் என்பதாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் அடிக்கடி குடும்பத்திற்க்குள் சண்டையும்.சச்சரவுமாக இருந்துள்ளது. 

இதற்கிடையில், கணவரும் குடித்து விட்டு மது போதையில் கெளரி மற்றும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தொடர்ந்து மன உளைச்சலில் காணப்பட்ட கெள்ரி யாரும் எதிர்ப்பாராத விதமாக தனது இரு குழந்தைகளை கொலை செய்ய,  தூக்கு கயிறை மாட்டி விட்டு கொன்றதும் அல்லாமல் தானும் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் தாயே குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.