காக்கி சீருடையில் காதலருடன் பெண் போலீஸ் சல்லாபம்! வைரல் வீடியோ!

கோவையில் காக்கி சீருடையில் காதலருடன் சல்லாபத்தில் ஈடுபட்ட பெண் போலீசின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.


கோவை மாவட்டம் சோமனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர் தான் இந்த சர்ச்சையில் சிக்கியவர்.இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரின் சகோதரருடன் இந்த காவலருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தனதுதோழி வீட்டுக்கு சென்ற பெண் காவலர் அங்கிருந்து தனது காவலனுடன் காக்கி சீருடையிலேயே சல்லாபம் செய்துள்ளார்.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகளை யாரோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளனர். அதில் பெண் காவலர் காக்கி சீருடையில் காதலருடன் உல்லாசமாக இருப்பதும் முத்தம் கொடுப்பதும் பதிவாகியுள்ளது.

காக்கி சீருடையில் சல்லாபம் செய்யும் வீடியோ வெளியானதை தொடர்ந்து அந்த பெண் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.