80 வயதிலும் 1 இட்லி 1 ரூபாய் தான்! ஊருக்கே சாப்பாடு போட்ட கோவை பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்கும் மோடி! நெகிழ்ச்சி சம்பவம்!

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வந்த பாட்டிக்கு வீடு கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளார் கோவை ஆட்சியர். பெருமிதமாக வாங்க மறுத்துள்ளார் பாட்டி.


கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வந்த கமலா பாட்டியை சமூக வலைதளங்களில் தெரியாத ஆளே இருக்க முடியாது. ஏனெனில் சமீப காலத்தில் அவரைப் பற்றிதான் அதிகமானோர் பேசியுள்ளனர். மேலும் அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். 

இதை அறிந்த கோவை ஆட்சியர் கு.ராசாமணி பாட்டியை அழைத்து கௌரவித்துள்ளார். அதேநேரம் இந்த தள்ளாத வயதிலும் பொது நோக்கோடு செயல்பட்டுவரும் பாட்டிக்கு வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார். ஆனால் பாட்டில் அதை வாங்க மறுத்து வேண்டாம் என்று கூறியுள்ளார். 

அப்போதும் விடாமல் பாட்டிக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு ஒன்றை விரைவில் கட்டித் தருவதாகவும் அதை கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார். 

இது குறித்து பேசிய கோவை ஆட்சியர் கூறுகையில், பொது நலத்தோடு செயல்படுபவர்களை இந்த சமூகம் நிச்சயம் அடையாளம் கண்டுகொள்ளும். 80 வயது ஆனாலும் பணத்திற்காக செயல்படாமல் பொது நலனுக்காக செயல்பட்டிருக்கிறார் இந்த பாட்டி. இவருக்கு கட்டாயம் அரசு திட்டத்தின் கீழ் வீடுகட்டிக் கொடுக்க உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றார்.

அதாவது பிரதமரின் வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் கூறியுள்ளார். உண்மையில் கலெக்டர் மூலமாக பிரதமர் தான் இந்த வீட்டை கட்டிக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.